திருக்குறள் பற்றி நாம் யாரும் அறிந்திடாத ஆச்சர்யமூட்டும் உண்மைகள்
பகுதி-01
திருவள்ளுவர், திருக்குறள் என யார் கேட்டாலும் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும், உலக மக்கள் முன்னிலையில் பெருமிதமாக நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் படியும், அனைவராலும் 'வள்ளுவர்' என் நாட்டில் பிறந்து இருக்கக்கூடாதா என பொறாமை கொள்ளும் அளவுக்கு பெருமையை தேடி சேர்த்தவர் நம் தமிழ்நாட்டு திருவள்ளுவர். இப்பெரும் புகழுக்கு முக்கிய காரணம் அறிவியல் கண்டுபிடிப்போ அரசவை ஆண்ட திறமையாலோ இல்லை, ஒரு சாதாரண புலவராக வளர்த்த சங்க காலத்தில் சாதி, மதம் என இரண்டையும் உடைத்தெறியும் தன் அறிவாலும், சிந்தனையாலும் வள்ளுவன் உருவாக்கிய இரண்டு அடியே, இல்லை ஒன்றே முக்கால் அடி.
திருக்குறள் இயற்ற பெற்றதன் காரணம்
இன்றைய நிலையை விட, சங்க காலத்தில் சாதி, மத அரசியல் பெரியதாக இருந்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மக்கள் யாரும் தெளிவு பெற்று விடக்கூடாது என்னும் நோக்கில் ஆரியர்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் போன்ற நூல்களை மக்களிடம் சென்று அடையாமல் மறைத்து உள்ளனர்.
இந்நிலையில் அறம், பொருள், இன்பம் என வாழ்க்கைக்கு தேவையான 3 அறநெறிகளை உலகமக்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லும் நூலாக திருக்குறள் இருக்கிறது. சாதி, மொழி, மதம் என எதற்கும் வள்ளுவர் இந்நூலில் இடம் அளிக்கவில்லை. உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு சலனமும் இன்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை படித்து புரிந்து கொள்கிறபோது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞர் என உலக மக்களின் மனதில் பதிகிறார்.
திருவள்ளுவரைப் பற்றிய சில அறியா உண்மைகள்
சிறு வயது முதல் நமக்கு பயிற்றுவிக்கப்பட்டது திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சிலர், அவர் மதுரை தமிழ் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றினார், நெடுஞ்செழிய பாண்டியனது அரசவை கவி ஆகவே அவர் மதுரையில் பிறந்தார் எனவும் சொல்கின்றனர். சிலர் அவரது முதல் குறளில் "ஆதி பகவன் முதற்றே உலகு" என கூறியதன் மூலம் அவர் ஆதி-பகவன் தம்பதியின் மகனாக இருக்க வாய்ப்பு எனவும், வாசுகியை மணந்தவர் என சொல்கின்றனர். இதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் சில ஆச்சர்யமான உண்மைகளையை வெளிக்கொணர்ந்து இருக்கிறது. திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்து இருக்கிறார், ஆக இந்த வருடத்துடன் (2018) பிறந்து 2049 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதரமாகக் கொண்டு தி.மு, தி.பி என காலத்தைப் பிரித்து பயன்படுத்துகின்றனர். பொன்னோ, பொருளோ கேட்பாரற்று கிடந்தால் எவரும் தனது, என உரிமைகோருவர் இல்லையா? அப்படி உருவம் பெற்றது தான் வள்ளுவரின் தோற்றம், அவர் முன் வாழ்ந்த புலவர் பற்றிக்கூட தகவல் பெரிதும் இருக்க வள்ளுவரை பற்றிய தகவல் பெரிதும் இல்லாதது வியப்பு தான்.
வள்ளுவர் வரலாற்று உண்மை
வள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என சிலரும், சமண மதத்தவர் என சிலரும், அவர் பெளத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி அவரவர்கள் தங்களுக்கான பங்கிற்கு சான்றுகள் அளிக்க ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறிஸ்தவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையோ வள்ளுவர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பிறந்தவர், ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டது வள்ளுவர் "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" ஆண்ட போது தன் திருக்குறளை புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்தாரென்று. ஆக கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் வள்ளுவர் என்ற மனிதன் வாழ்ந்ததும் அவன் எழுதியது தான் திருக்குறள் என்பது தெரியவருகிறது. ஆனால் அவரை பற்றிய மற்ற தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
வள்ளுவரின் மனம்
வள்ளுவர் கற்பனையான கடவுள்களை ஏற்கவில்லை என்பது, அவர் தனது குறட்பாக்களில் ஒரு முறை கூட "கடவுள்" என்ற சொல் பயன்படுத்தாமல் இருந்ததன் மூலம் அறியலாம். கூடவே சாதி, மதம், மொழி என எதனையும் அவர் அடையாளப்படுத்தவில்லை. அனைவரையும் கற்கும் படி வற்புறுத்தியவர், அதன் படி பொய் பேசாமலும், களவு தொழிலில் ஈடுபடாமலும் நாகரீகத்தோடு வாழவே எண்ணினார். அவர் எழுதிய திருக்குறளில், குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் வாழவேண்டும், ஆட்சியாளர்கள் மனித நேயத்துடன் மக்களாட்சி புரிய வேண்டும் என்பதையே மைய கருத்தாக வைத்திருந்தார்.
உலக பொதுமறை திருக்குறள்
திருவள்ளுவர் பற்றிய 'திருவள்ளுவ மாலை'
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை' யில் சில பாடல்கள் உள்ளன.
அதில் ஒரு பாடல்:
"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதிவல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று"
திருவள்ளுவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரங்கள்
தமிழக முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களால் 1975-ம் ஆண்டு திருவள்ளுவரை அங்கீகரிக்க முக்கடல் கூடும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய தீவில் திருக்குறளின் அதிகாரங்களை நினைவு கொள்ளும் படி 133 அடி சிலையை நிறுவ ஆணைபிறப்பிக்கப்பட்டது. 2000-வது ஆண்டில் சுமார் 7000கி எடையில் க்ரானைட்(Granite) கல்லினால் திருவள்ளுவரின் திருவுருவ சிலை வடித்து அப்போதைய முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களால் நிறுவப்பட்டது. தீவிற்கு சென்று வள்ளுவரை காணும் வகையில் படகு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரின் மைய பகுதியில் திருவள்ளுவரின் நினைவாக கோவில் தேரை போல் ஒரு கல் தேரினை உருவாக்கி உலக மக்கள் அனைவரும் எளிதில் வரக்கூடிய இடத்தில் அதனை நிறுவி அப்பகுதியை "வள்ளுவர் கோட்டம்" என பெயரிட்டு சிறப்பித்தது தமிழக அரசு. 1330 குறட்பாக்களும் அங்கு உள்ள பெரிய அரங்கில் மக்கள் பார்வைக்கு பொறிக்கப்பட்டுள்ளது. அரங்கம் 4000 பேரை கொள்ளும் அளவில் பெரியதாய் உள்ளதால் மக்கள் எந்தவொரு சிரமமும் இன்றி திருக்குறளையும் அதன் அர்த்தங்களையும் உணர முடியும்.
திருவள்ளுவர் "கண்ணுடைய ரென்பவர் கற்றோர்" என கூறியதை மெய்ப்பிக்கும் விதத்திலும் அவர் கௌரவிக்கும் நோக்கிலும் தமிழக அரசு வேலூர் மாவட்டத்தில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவியது. இக்கல்வி நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கூடலூர் முதலான மாவட்ட மக்களுக்கு கல்வி கற்க பெரிதும் உதவி வருகிறது.
உலகமே போற்றும் நமது திருவள்ளுவருக்கு கோவில் எழுப்பி அமெரிக்க நாடும் அவரது பெருமையை போற்றியது. இஃது வள்ளுவருக்கு எழுப்பிய இரண்டாவது கோவில் ஆகும். இதனை போலவே உலக நாடுகள் பலவும் திருவள்ளுவரின் சிலைகளையும் அவரது பெயரை சில நகரங்களுக்கு சூட்டியோ பெருமை படுத்தி வருகின்றன.
சமீபத்திய முயற்சி திருக்குறள் மலை
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் அறிவாற்றலையும் சாதனைகளையும் நாம் இன்று அறிய உதவுவது நமது தமிழர்களின் சிறந்த பழக்கமான பதிவிடுதலே ஆகும். எந்தவொரு நிகழ்வாயினும், சிறியதோ பெரியதோ அதனை எழுத்து வடிவில் கல்வெட்டிலோ இல்லை ஓவிய வடிவில் சுவற்றிலோ வடித்தனர், இதன் மூலம் நாம் இன்று வரை அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை அறிந்து மெய்சிலிர்த்து வருகிறோம். அதனை போலவே இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருவள்ளுவரின் திருக்குறள் அழியாமல் காக்க எடுக்கப்படும் பெரும் முயற்ச்சியே திருக்குறள் மலை. மொத்தமுள்ள 1330 குறட்பாக்களை கல்வெட்டாக ஈரோடு அருகில் உள்ள மலையில் பொறிக்க வேலைகள் நடந்து வருகின்றன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக படிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் குறிப்புடன் இருக்கும் அமைப்பினர் மிக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளனர்.
தொடரும்...
0 Comments